search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Distric Forest Officer"

    • கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அங்கமங்கலம் பஞ்சாயத்து சார்பில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணி நடந்தது.
    • வன அலுவலர் மகேந்திரன் பனை விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

    குரும்பூர்:

    மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக 1 கோடி பனை விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது.

    இதனைத்தொடர்ந்து கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் அங்கமங்கலம் பஞ்சாயத்து சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஒரு லட்சம் பனை விதைகள் மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.

    அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி எதிரே நடந்த விழாவிற்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார். அங்கமங்கலம் பாலமுருகன் வரவேற்றார்.

    தொழிலதிபர் செல்வகுமார், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கடம்பாகுளம் மறுகால் ஓடை கரையோரங்களில் 1  லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி மற்றும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் அங்கமங்கலம் பஞ்சாயத்து செயலாளர் கிருஷ்ணம்மாள், ஊராட்சி கணினி இயக்குனர் ஜென்சி, பணித்தள பொறுப்பாளர் கஸ்தூரி, பரமேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி நன்றி கூறினார்.

    ×