search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Administrators"

    • விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

    கோவை

    விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடும்போது மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களி மண்ணால் செய்யப்பட்டது, பிளாஸ்டா் ஆப் பாரிஸ், தொ்மாகோல் போன்ற கலவையில் தயாரிக்கப்பட்ட சிலைகளை தவிர சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை நீா்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

    சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலா்ந்த மலா் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொா்மாக்கோல் பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீா் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வா்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

    சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகா் சிலைகளை மாவட்ட நிா்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயக சதுா்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2வது கட்டமாக நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #makkalneedhimaiam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவரது கட்சிக்கு மாநில அளவில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

    முதல் கட்டமாக கடந்த மாதம் சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று 2 வது கட்டமாக மீதமிருந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் விபரம்:-

    என்.ரவிச்சந்திரன்- நாகப்பட்டினம் வடக்கு, எஸ். விஜய்குமார் -தஞ்சாவூர் கிழக்கு, தரும சரவணன் - தஞ்சாவூர் மத்தி, டாக்டர். பி.ஏ.சதாசிவம் - தஞ்சாவூர் தெற்கு, ஆர்.அயூப் கான்- மதுரை வடக்கு, எம்.முருகன் -மதுரை கிழக்கு, விபி.மணி -மதுரை மேற்கு, வி.முனியசாமி - மதுரை தெற்கு, எம்.அழகர்- மதுரை மத்தி, பிஜி.சேகர்-ராமநாதபுரம் தெற்கு,

    ஆர்.வடிவேல் - கிருஷ்ணகிரி மேற்கு, எம்.நடராஜன் - சேலம் மத்தி, சி.கோபால் -சேலம் கிழக்கு, பிரசன்ன சித்தார்த்தன் - சேலம் மேற்கு, எம்.பிரபு மணிகண்டன்- சேலம் தெற்கு, துரை சேவுகன் -ஈரோடு மேற்கு, எம்.புகழ்முருகன் - கரூர் மேற்கு, சுரேஷ் குமார் - கரூர் கிழக்கு, பி.வெங்கடேஷ் -திருப்பூர் கிழக்கு, ஏ.ரவிக்குமார் -திருப்பூர் தெற்கு, கே.ஜீவா - திருப்பூர் மேற்கு

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #makkalneedhimaiam

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” எனும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

    கடந்த மாதம் அவர் அந்த கட்சியை டெல்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்தார். தேர்தல் கமி‌ஷனும் கமல்ஹாசனின் கட்சியை அங்கீகாரம் செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    கட்சித் தொடங்கிய 4 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முக்கிய நிர்வாகிகள் இல்லாததால் கட்சியின் செயல்பாடுகளில் தேக்க நிலை உருவாகி இருப்பதாக அதிருப்தி எழுந்தது. அதோடு கட்சியில் மேல் மட்டத்துக்கும் கீழ் மட்டத்துக்கும் தொடர்பு இல்லாத நிலை இருப்பதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) அமாவாசை தினத்தன்று அந்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடிமட்டம் வரை வலுவான தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த தொண்டர்களுக்கும் கட்சி தலைமைக்கும் முறையான இணைப்பு இல்லை என்று பேச்சு நிலவுகிறது. ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை.

    மேலும் கட்சியின் அனைத்து முடிவுகளையும் கமல்ஹாசன் மட்டுமே எடுப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. கட்சியில் யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் கதை கதையாக பேசப்படுகிறது. இந்த கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் அமையும்.

    கமல்ஹாசனை பொறுத்த வரை மக்கள் நீதி மய்யம் கட்சியை மிக, மிக வலுவான உள்கட்டமைப்புடன் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் தன்னை தனிப்பட்ட முறையில் அதில் ஈடுபடுத்தியுள்ளார். அதோடு ஆலோசனைகள் பெற 3 குழுக்களையும் வைத்துள்ளார்.

    சென்னை, பெங்களூரு, அமெரிக்கா ஆகிய மூன்று இடங்களில் அந்த குழுக்கள் செயல்படுகிறது. அந்த குழுவினருடன் கமல்ஹாசன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 12-ந்தேதி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த நியமனம் கட்சி தொண்டர்கள் மத்தியில் நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது மட்டுமின்றி கட்சியில் புதிய வேகத்துடன் செயல்பட நிர்வாகிகள் நியமனம் கை கொடுப்பதாக அமையும். எனவே கமலின் அறிவிப்பை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாகும் 12-ந்தேதி அன்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசவும் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அன்று அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியையும் ஏற்றி வைப்பார். அந்த கட்சி கொடிக்கு தலைமை தேர்தல் கமி‌ஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது.

    மக்கள் நீதி மய்யம் மேல் மட்டத்தில் மட்டும் இயங்குவதாக ஒரு கருத்து பரவி உள்ளது. 12-ந்தேதி அதற்கு விடை கிடைக்கும். கடை கோடியில் உள்ள தொண்டனிடமும் கமல்ஹாசன் காது கொடுத்து கேட்டு கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பது தெரியவரும்.

    நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்ட பிறகு கட்சி புதிய எழுச்சி பெறும்.

    இவ்வாறு அந்த செயற்குழு உறுப்பினர் கூறினார். #MakkalNeedhiMaiam
    நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது அரசியல் கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை “ரஜினி மக்கள் மன்றம்” என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்படி உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து அடையாள அட்டையை வழங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் சமீபத்தில்  நாடு திரும்பினார்.  சென்னை திரும்பியதும் அவர் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நேற்று சென்னையில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தென்னிந்திய நதிகளை இணைப்பது தான் தனது கனவு என்றும் கண் மூடுவதற்கு முன்னால் அது நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் பற்றி இந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசாவிட்டாலும், அவரது இந்த கருத்து ரசிகர்களிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது  கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். #Rajinikanth #RajiniMakkalMandram 
    ×