search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Planning Committee members"

    • தூத்துக்குடி மாவட்டத்தை முதன்மை பெற்ற மாவட்டமாக்க நாம் திட்டக்குழு மூலம் வளர்ச்சி பணிகளை செயலாக்கி காட்ட வேண்டும்.
    • திட்டக்குழு உறுப்பினர்கள், எம்.பி., அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் துணிச்சலாக தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூற வேண்டும் என்று பிரம்மசக்தி உமரிசங்கர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 7 பேரும், நகரத்தில் இருந்து 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டுள்ள திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் அறிமுக கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக முத்து அரங்கத்தில் திட்டக்குழு தலைவரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான பிரம்மசக்தி உமரிசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ வரவேற்று திட்டக்குழுவின் செயல்பாடுகள் குறித்து விவரித்து கூறினார். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு தலைவர் பிரம்மசக்தி உமரி சங்கர் பேசினர். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் பிரதிநிதிகளுக்கு தான் மக்களுக்கு என்னெ ன்ன திட்டங்கள் தேவை, என்ன அடிப்படை வசதிகள் தேவை என்பது தெரியும், எனவே நாம் தான் மக்களிடம் நெருங்கி இருக்கிறோம். தூத்துக்குடி மாவட்டத்தை முதன்மை பெற்ற மாவட்ட மாக்க நாம் திட்டக்குழு மூலம் வளர்ச்சி பணிகளை செயலாக்கி காட்ட வேண்டும். நமக்கு தான் அதி காரம், உரிமை அதிகமாக உள்ளது. அதிகாரிகள் இனி மேல் சுயமாக முடிவெடுத்து அதனை செயல்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்.

    திட்டக்குழு மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டக்குழு உறுப்பினர்கள், எம்.பி., அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் அவர்களிடம் துணிச்சலாக தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூற வேண்டும். நாம் திறமையாக செயல் பட்டால் அதிகாரி களுக்கு அறிவுரை கொடுக்க லாம் .அதனை நாம் வள ர்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அதிகாரி களுக்கு திட்டக்குழு மூலம் உத்தரவிட முடியுமா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார் கேட்டுக் கொண்டார். 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் நடக்கும். அரசிடம் இருந்து தகவல் வந்தவுடன் இது குறித்து தெரிவி க்கப்படும் என்று மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து திட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
    • ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி நடைபெறுகிறது என்று கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 ந் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 10 ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. ஜூன் 12 ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. ஜூன் 14 ந் தேதி பிற்பகல் 3 மணி வரையில் வேட்புமனுவை திரும்பப்பெறலாம். இதையடுத்து மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் ஜூன் 23 -ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. பின்னா் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இத்தோ்தல் மூலம் மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 10 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இதில், வாக்களிக்கும் வாக்காளா்கள் அடையாளச் சான்று படிவம் 15 ல் தங்களது நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையா், செயல் அலுவலரிடம் இருந்து சான்றொப்பம் பெற்ற பின்னரே வேட்புமனு தாக்கல் செய்யவும், வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×