search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali season"

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து, மதுரை வழியாக தூத்துக்குடி, நெல்லைக்கு தீபாவளி சீசன் சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்கப்படுகிறது.

    யஸ்வந்த்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06565) அக்டோபர் 18 மற்றும் 25 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து வருகிற 19, 26-ந் தேதி புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும். பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து வருகிற 21-ந் தேதி மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு மைசூர் செல்லும். யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×