search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctor Arrest"

    • செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
    • மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது.

    சில மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் திருடி விற்கப்படுவதாக அவ்வப்போது அதிர்ச்சி செய்திகள் வெளியாகும். அந்த வகையில் ஜப்பானில் பற்களை திருடி விற்ற டாக்டர் ஒருவர் போலீசாரிடம் சிக்கி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த டாக்டர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

    அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

    இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.
    • டாக்டர் ஷெர்ரி ஐசக் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    விபத்தில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷெர்ரி ஐசக்கை பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர், அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க மறுத்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் டாக்டர் ஷெர்ரி ஐசக் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லஞ்சம் கேட்பது குறித்து திருச்சூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜிம்பாலிடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.

    ஒட்டுப்பாறையில் உள்ள டாக்டர் ஷெர்ரி ஐசக் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். அதனை டாக்டர் ஷெர்ரி ஐசக் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து முழங்குனத்துகாவில் உள்ள டாக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ15.25 லஞ்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கி சிக்கிய டாக்டர் ஷெர்ரி ஐசக் தனது துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்தவர் முகமது ஷகாப் (வயது 49). பல் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது பெற்றோர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தனர். அவர்களை வீட்டில் இருந்து கவனித்து கொள்ள டாக்டர் முகமது ஷகாப், ஹோம் நர்சு ஒருவரை நியமித்தார். 28 வயதான அந்த நர்சு, டாக்டரின் வீட்டில் தங்கி அவரின் பெற்றோரை கவனித்து கொண்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த நர்சை, டாக்டர் முகமது ஷகாப் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி நர்சு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி டாக்டர் முகமது ஷகாப் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் அவர் வெளிநாடு தப்பி சென்றார். நேற்று முன்தினம் அவர் ஊர் திரும்பினார். இதனை அறிந்த போலீசார் கொச்சி விமான நிலையத்திற்கு சென்று டாக்டர் முகமது ஷகாப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கொடுங்கலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×