என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "driver sacrifice"
- பண்ருட்டி அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலியானார்.
- டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுார் பழைய காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், (வயது21) . டிரைவர். இவர், காட்டுக்கூடலுாரில் கார்த்திக் என்பவரது டிராக்டரை ஆயுத பூஜைக்காக ஏரிக்கு கொண்டு சென்று கழுவி, ஏரிக்கரையில் இருந்து மேல் ஏற்றி விட்டார். பின்னர் ஏரியில் கிருஷ்ண குமார் குளித்தபோது ஆழமான பகுதியில் சென்று சிக்கிய கிருஷ்ணகுமார் உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் கிருஷ்ணகுமார்உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் ஆகியோர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது.
- பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.
கடலூர்:
சென்னையில் இருந்து நாகை நோக்கி இன்று காலை அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை குடவாசல் பகுதியை சேர்ந்த டிைரவர் சகாதேவன் ஓட்டினார். இந்த பஸ் சிதம்பரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. பைபாஸ் சாலையில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இதற்கான துளை போடும் எந்திரம் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த எந்திரத்தின் மீது அரசு பஸ் பயங்கரமாக ேமாதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சிதைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் சகாதேவன் சம்பவ இடத்தில் பலியானார். பயணிகள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடம் முக்கிய சாலை ஆகும். இதனால் அந்த இடத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் வேதனையால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர். அவர்கள் தூக்கி கொண்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.