search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driving training school"

    • எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது
    • ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும்

    பிப்ரவரி 28 முதல் ஓட்டுநர் உரிமங்கள், பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும். எக்காரணம் கொண்டும் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதில்,வாகன், சாரதி மென்பொருளில் அலைபேசி எண், முகவரி தவறாக தெரிவித்திருந்தாலும் விரைவு அஞ்சலில் அனுப்பப்படாது. ஓட்டுநர் உரிமம் தபாலில் டெலிவரி செய்யப்படாமல் திரும்ப பெறப்பட்டாலும் நேரில் ஒப்படைக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரரிடமிருந்து உரிய ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் பெறப்பட்டு அதில் தான் அனுப்பப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி முகவரியை குறிப்பிட்டிருந்தால் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவநாராயணன் மெக்கானிக்கை வரவழைத்து பஞ்சர் ஒட்டிவிட்டு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சிவ நாராயணன் (வயது 35). இவர் அப்பகுதியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். பின்னர் வெளியே வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் பஞ்சராகி நின்றது.

    உடனே மெக்கானிக்கை வரவழைத்து பஞ்சர் ஒட்டிவிட்டு அருகே உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் முன்புற கவரில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை காணவில்லை.

    மர்மநபர்கள் நோட்டம் போட்டு அந்த பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×