search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dr.Sivanthi Aditanar College of Engineering;"

    • சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
    • தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம் என கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பயின்றோர் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினித்துறை பேராசிரியர் ஜென்ஸி வரவேற்று பேசினார். பயின்றோர் கழக செயலாளர் ஜோஸ்வா பாபு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் 'தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம்' என்றார்.

    தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் 15 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை கணினித்துறை பேராசிரியர் கேசவராஜா நடத்தினார். இதில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து, சிவந்தி கோப்பையை வென்றது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது.

    பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. முடிவில், தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
    • முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கமும், திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரியும் இணைந்து நேற்று கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.

    619 பேர் தேர்வு

    முகாமில் தென் பகுதி மாநிலங்களில் இருந்து 112 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதேபோல் மாணவ, மாணவிகள் மற்றும் படித்து முடித்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பேர் கலந்து கொண்டனர். இதில் 619 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் யூனியன் தலைவி செல்வி வடமலை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வரவேற்றார்.

    பணி நியமன ஆணை

    சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்பி. கலந்துகொண்டு தேர்வு பெற்ற 619 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, வாழ்த்தி பேசினார். முன்னதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் வீரபத்திரன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×