என் மலர்
நீங்கள் தேடியது "Dr.sivanthi aditanar school"
- பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் "உலக செவித்திறன் குறைவுடையோர்" தினம் கொண்டாடப்பட்டது.
- பள்ளியின் முன்பு தொடங்கிய பேரணியில் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து பள்ளியில் நிறைவடைந்தது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் "உலக செவித்திறன் குறைவுடையோர்" தினம் கொண்டாடப்பட்டது.
நேஷனல் டிரஸ்டின் அறிவுரையின்படி செவித்திறன் குறைவுடை யோர் சைகை மொழி என்ற மையக் கருத்தின் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி ( நேற்று) வரை உலக செவித்திறன் குறைவுடை யோர் சைகை மொழி தின, விழிப்புணர்வு வாரமாக கொண்டாட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி தாளாளர்தவமணி தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். பள்ளியின் முன்பு தொடங்கிய பேரணியில் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து பள்ளியில் நிறைவடைந்தது.
பேரணியில் பள்ளியின் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியை செல்வி கார்த்தி, இயன்முறை மருத்துவர் புனிதா, அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.






