search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "due to stagnant"

    • பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர், ஆக.21-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்பளிச்சாம் பாளையம் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    ஒட்ட பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவுநீர் வடிகால் ஊரின் எல்லை பகுதிவரை மட்டும் கட்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினர் துர்நாற்றத்தினாலும், கழிவுநீர் தேங்குவதால் கொசு மற்றும் குடிநீர் குழாயில் இந்த கழிவு நீர் கலந்து வருவதால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் முகம் சுழித்து செல்லும் நிகழ்வும் தினமும்அரங்கேரி வருகின்றது.

    மேலும் காலனியில் உள்பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனால் அங்கிருந்து அம்மனம் பாளையம் என்ற பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் எடுத்து வருவதாகவும் இதற்கு உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×