search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dust Flying Road"

    • பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் நகர்புற பகுதியில் தற்போது பழைய தார் சாலைகளை அகற்றிவிட்டு ஜல்லிகளை கொட்டி மட்டப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதிதாக அமைக்கப்படும் சாலையில் புழுதிகள் பறக்காத வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டியது கட்டாயமாகும்.ஆனால் அதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் பாவூர்சத்திரம் நகர்ப்புற பகுதியில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் அரசு தனியார் துறை ஊழியர்கள் புழுதி பறக்கும் சாலையில் வாகனம் ஓட்ட திணறி வருகின்றனர். பலருக்கு சுவாச கோளாறும் அதிகம் ஏற்படுவதாகவும் இதற்கு தீர்வு காண புழுதி பறக்கும் சாலையில் கூடுதலாக தண்ணீரை தெளித்து சாலை அமைக்கவும், தென்காசியில் இருந்து ஆலங்குளம் வரை நடைபெறும் சாலை பணியில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களும், சாலை பணி நடைபெறுவதை குறிக்கும் எச்சரிக்கை பலகையும் பயன்படுத்தப்படவில்லை. எனவே அவைகளை முறையாக அமைத்து வாகன ஓட்டிகள் எவ்வித சிரமம் இன்றி பயணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இச்சாலை பணியானது முறையாக செயல்படுத்தப்படாமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவில்லை எனில் பாவூர்சத்திரம் பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×