என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "egistered in the National Database"
- மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும்.
கோவை:
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) காயத்திரி தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி. அமைப்பு சாரா தொழி லாளர்களின் தேசிய தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதற்காக www.eshram.ov.in என்ற வலைத்தளத்தின் மூலம் கட்டுமான, புலம் பெயர்ந்த, விவசாய தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், தச்சுவேலை செய்பவர்கள், கல்குவாரி, முடி திருத்துவோர். தெரு வியாபாரிகள், சிறுவியா பாரிகள், ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், நெசவாளர் பதிவுகள், மீனவ மற்றும் செங்கல் சூளை, தையல், சாயப்பட்டறை, பட்டு வளர்ப்பு தொழிலாளர்கள், ஓட்டுனர்கள் உள்பட 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை அனைத்து பொதுசேவை மையங்களிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
மாநில அரசின் பல்வேறு வகையான நலவாரியங்க ளின் கீழ் பதிவு செய்து உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும் கட்டாயம் இந்த தரவு தளத்தின் கீழும் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்து கொள்ள 18 வயது முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமானவரி செலுத்துபவராகவும், இ.எஸ்.ஐ., வருங் கால வைப்புநிதி பிடித்தம் செய்யும் பணியாளர்களாக வும் இருக்கக்கூடாது.
ஆதார் அடை யாள அட்டை, வங்கிக ணக்குபுத்தகம், ஆதார் எண்ணுடன் இணை க்கப்பட்ட செல்போன் எண் ஆகிய ஆவணங்கள் பதிவு செய்ய தேவைப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு தளத்துக்கு சென்று தாங்களாகவே சுயபதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங் கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் வேலை மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக புலம் பெயர இருந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை பெற உதவியாக இருக்கும்.
மேலும் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு விபத்து காப்பீடு இலவசமாக செய்யப்பட்டு விபத்தில் மரணம் அடைந்தாலோ அல்லது முழு உடல் ஊனம் ஏற்பட்டாலோ ரூ.2 லட்சமும், பகுதியளவு உடல் ஊனத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் மத்திய அர சால் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பங்களி ப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்கள் மூலமும் பயன்பெறலாம்.
அத்துடன் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேலைவாய்ப்பு இணையதளம் இந்த வலைத்தளத்தில் இணை க்கப்படுவதால் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் வேலைவாய்ப்பை எளிதில் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்