search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "egypt president"

    • இந்தியா, எகிப்து இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினா. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:-

    எகிப்து அதிபர் எல்-சிசி மற்றும் அவரது குழுவை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். நாளை குடியரசு தினத்தில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். ராணுவ அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் பழமையான நாகரீகங்களை கொண்டவை. நமது நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஆழ்ந்த இருதரப்பு உறவுகளை நாம் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக எகிப்துக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

    எகிப்து அதிபருடனான சந்திப்பில், கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரால் ஏற்பட்ட உணவு வினியோக சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளை பற்றி ஆலோசித்தோம். பயங்கரவாதம் உள்ளிட்டவற்றுக்கு உதவக்கூடிய சைபர் இணையதளத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிராக நாம் ஒத்துழைப்புடன் பணியாற்றுவோம். நமது இரு நாடுகளுக்கு இடையே கூட்டு ராணுவ பயிற்சி அதிகரித்து உள்ளது. எல்லை கடந்த பயங்கரவாதம் கட்டுப்படுவதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்து உள்ளன.

    கொரோனா பரவலின்போது தேவையான ஒத்துழைப்புடன் நாம் இணைந்து பணியாற்றினோம். இதேபோன்று, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு வர்த்தகம் 12 பில்லியன் டாலரை (ரூ.97 ஆயிரத்து 907 கோடி) எட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் கலந்துகொள்கிறார்.
    • எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    நாட்டில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (1950, ஜனவரி 26-ந் தேதி) குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இந்த ஆண்டு தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா நாளை (26-ந்தேதி) கோலாகலமாக நடைபெறுகிறது.

    இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி (வயது68) கலந்து கொள்கிறார்.

    இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படை பிரிவும் கலந்துகொள்கிறது.

    குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மத்திய வெளியுறவு துறை ராஜாங்க மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த வரவேற்பில் பாரம்பரிய நாட்டுபுற நடனமும் இடம்பெற்றது. எகிப்து அதிபருடன் அந்நாட்டின் 5 மந்திரிகளும், உயர்மட்டக் தூதுக்குழுவும் வந்துள்ளது.

    இந்த நிலையில் எகிப்து அதிபர் சிசிக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி பேண்டு வாத்தியம் மற்றும் வீரர்களின் அணிவகுப்புகளுடன் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    எகிப்து அதிபர் சிசியை ஜனாதிபதி திரவுபதி முர்மு கை குலுக்கி வரவேற்றார். அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இருவரும் கை குலுக்கி கொண்டனர். மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை எகிப்து அதிபருக்கு பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

    பின்னர் எகிப்து மந்திரிகள் மற்றும் குழுவினர் ஜனாதிபதி மற்றும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்த வரவேற்புக்கு எகிப்து அதிபர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

    அதன்பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் சிசி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும் விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டது.

    இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். மேலும் இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

    • எகிப்து அதிபருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்துகொள்கிறார். இதற்காக மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்து சேர்ந்தார். எகிப்து அதிபருடன் 5 மந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் வந்துள்ளனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த எகிப்து அதிபருக்கு பாரம்பரிய நாட்டுப்புற நடனத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அவருக்கு நாளை ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. எகிப்து அதிபர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடக்கும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் எகிப்து அதிபர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேச உள்ளார். நாளை மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

    இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது. 

    • எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
    • குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா 26-ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகைகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன.

    இந்தக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி (68) கலந்து கொள்கிறார். இந்திய குடியரசு தினவிழாவில் எகிப்து அதிபர் ஒருவர் அழைக்கப்பட்டு வருவது இதுவே முதல் முறை ஆகும். குடியரசு தின அணிவகுப்பில் எகிப்து படைப்பிரிவும் கலந்து கொள்கிறது.

    இந்நிலையில், எகிப்து அதிபர் அல் சிசி 3 நாள் அரசுமுறைப் பயணமாக 24-ம் தேதி இந்தியா வருகிறார். அவருக்கு 25-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாயப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று மாலை அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்து கவுரவிக்கிறார்.

    எகிப்து அதிபர் சிசி, பிரதமர் மோடியுடன் இரு தரப்பு உறவுகள், உலகளவிலான விஷயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் இந்திய தொழில் அதிபர்களையும் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவும், எகிப்தும் விவசாயம், இணையத்தகவல் ஊடுவெளி, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக அரை டஜனுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடும். இரு தலைவர்கள் சந்திப்பின்போது, பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

    எகிப்து நாட்டில் இந்திய தரப்பில் 50 நிறுவனங்கள் 3.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.
    • மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன.

    இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்தார். இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகின்றன.

    மேலும், இந்தியாவும் எகிப்தும் நாகரீக மற்றும் ஆழமான வேரூன்றிய மக்களிடையேயான உறவுகளின் அடிப்படையில் அன்பான மற்றும் நட்புறவை அனுபவிக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×