என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Eligibility Test"
- குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
திருப்பூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியே ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைகழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL,IELTS,GRE,GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் ,வேளாண்அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் , சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, , மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான செலவினம் தாட்கோவால் வழங்கப்படும்.
இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாம் விரும்பும் அயல் நாடுகளிலும் கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம் இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501,503, 5 வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604 என்ற முகவரியிலும், அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421-2971112 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது.
- தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் 2-ம் நிலை காவலர், தீயணைப்பு படைவீரர் மற்றும் வனக் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து வருகிற 11-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னாள் ராணுவத்தினரும் இதில் பங்கேற்கிறார்கள். இன்று முதல் 8-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்த்தல் உள்ளிட்ட முதல் கட்ட தேர்வு நடக்கிறது.
பின்னர் ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தகுதியான தேர்வர்கள் 9-ந்தேதி முதல் நடக்க உள்ள கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வில் பங்கேற்பதற்கு முன் பலத்த சோதனைக்கு பிறகே தேர்வர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வில் கலந்து கொள்ள வருவோர் செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கருவிகள் தேர்வு வளாகத்திற்கு எடுத்து வரக்கூடாது, காலம் தாமதம் இல்லாமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது.
- இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 2022-ம் ஆண்டு அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி வரை வழங்கப்பட்டது.
சேலம், நாமக்கல்
இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வசிக்கும் ஆசியர் பட்டயபடிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு படித்தவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து தாள்-1- க்கு 230878 பேரும், தாள்-2-க்கு 401886 பேரும் என மொத்தமாக 632764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினர். எனவே இந்த கோரிக்கையினை ஏற்று தாள்-1, தாள்-2 -க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் வழங்கி உள்ளது.
அதன்படி 24.07.2022 முதல் 27.07.2022 வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. விண்ணப்பபடிவத்தில் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் மேலும் மாற்றங்களை செய்யக்கூடாது.
மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
- 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராவிட்டால் தேர்வு மையத்தில் அனுமதி இல்லை என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
- தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வுகள் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 4,160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு எழுதுவதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருப்பார். மேலும் 20 பேருக்கு ஒரு போலீஸ்காரர் கண்காணிப்பாளராக இருப்பார்.தேர்வு மையத்திற்கு வரும் தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா மட்டும் கொண்டு வரவேண்டும். தேர்வு நடைபெறும் இடத்திற்கு 8.30 மணிக்கு வர வேண்டும். 9.50 மணிக்கு மேல் யாருக்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி கிடையாது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். ஹால் டிக்கெட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் பதட்டப்படாமல் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்தபோது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் போதும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வழக்கமாக சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு பொது அறிவு தேர்வுக்கு 70 மதிப்பெண்ணும், உடல் தகுதி தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.
இந்த முறை புதிதாக இந்த மதிப்பெண் தவிர தமிழ் தகுதித் தேர்வு தனியாக நடத்தப்படும்.இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் கலந்துகொள்ள தகுதி உடையோர் ஆவார்கள். இதன்படி 25-ந்் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுஅறிவுத் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தமிழ் தகுதி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்கு பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்