search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Engineer arrest"

    ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க, அமெரிக்காவில் படிக்கும் சென்னை மாணவியிடம், ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    சென்னை போரூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். இவருடன் குடும்ப நண்பராக பழகி வந்த சென்னை அரசு பெண் அதிகாரியின் மகள் அமெரிக்காவில் படித்து வருகிறார். திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது ரமேஷ்தான் உடன் இருந்து கவனித்தார். ரமேஷ் தற்போது சென்னை வந்து விட்டார்.

    அரசு பெண் அதிகாரி தனது மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருகிறார். இந்தநிலையில், பெண் அதிகாரியின் மகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு தகவல் அனுப்பப்பட்டது.

    அந்த தகவலில், உனது ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது, அவற்றை இணைய தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி பணம் தர வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது. இதைக்கேட்டு சென்னையில் இருக்கும் அரசு பெண் அதிகாரி துடித்து போனார். திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற தகவலை அனுப்பி மிரட்டுபவர் யார்?, என்று தெரியாமல் பெண் அதிகாரி கடும் குழப்பம் அடைந்தார்.

    இது குறித்து டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகாரில் வலியுறுத்தினார். உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அவர் நடத்திய அதிரடி விசாரணையில், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த நபர், என்ஜினீயர் ரமேஷ் என்று தெரியவந்தது. அவர் வேறொருவர் பெயரில் இந்த மிரட்டல் துரோக நாடகத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. குடும்ப நண்பராக உயிருக்கு, உயிராக பழகிய ரமேஷ், இதுபோன்ற துரோகச்செயலில் ஈடுபட்டது போலீசாருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அரசு பெண் அதிகாரியும், இதைக்கேட்டு மனம் உடைந்தார்.

    ரமேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். ஆபாச படம் வெளியிடுவதாக மிரட்டியது ஏன்? என்பது பற்றி அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    நான் அரசு பெண் அதிகாரிக்கு, அவரது வீட்டை பெரிதாக கட்டுவதற்கு ரூ.50 லட்சம் வரை கடனாக கொடுத்தேன். அந்த பணத்தை திருப்பித்தராமல் இழுத்தடித்து வந்தார். மேலும் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். திருமணம் நடந்தால், நமக்கு பணம் திரும்பி கிடைக்காது. எனவே திருமணத்தை நடத்தவிடாமல் தடுப்பதற்கு, இந்த மிரட்டல் நாடகத்தை நடத்தினேன்.

    பெண் அதிகாரியின் மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, நான்தான் உடன் இருந்து கவனித்தேன். அப்போது அவர் செல்போனில் வைத்திருந்த அவரது ஆபாச படங்களை நான் எனது செல்போனில் எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த படங்களை வைத்துதான் மிரட்டல் செய்தி அனுப்பினேன். இவ்வாறு ரமேஷ் தனது வாக்குமூலத்தில் கூறியதாக, போலீசார் தெரிவித்தனர். ரமேசின் செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை போலீசார் கைப்பற்றினார்கள். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார், என்று போலீசார் தெரிவித்தனர்.
    குளச்சல் அருகே இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்த என்ஜினீயர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    குளச்சலை அடுத்த மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் சகாய பிரதீஷ்டன் (வயது 22).

    சகாய பிரதீஷ்டன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். மண்டைக்காடு புதூரில் இவரது வீடு அருகே இளம்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

    சகாய பிரதீஷ்டன் சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வரும்போது, அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

    சமீபத்தில் சகாய பிரதீஷ்டன் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவர் அந்த பெண்ணை சந்திக்க சென்றார். அப்போது அந்த பெண் வீட்டின் குளியலறையில் இருந்து வெளியே வந்தார்.

    அதனை சகாய பிரதீஷ்டன் தனது செல்போனில் படம் பிடித்து கொண்டார். பின்னர் அந்த படத்தை பெண்ணிடம் காட்டி அதனை பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண்ணை சகாய பிரதீஷ்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதற்கிடையே வெளிநாட்டில் இருந்த பெண்ணின் கணவர் சமீபத்தில் ஊருக்கு வந்தார். அதன்பின்பும் சகாய பிரதீஷ்டன் அடிக்கடி அந்த பெண்ணை ரகசியமாக சந்தித்து ஆசைக்கு இணங்க வலியுறுத்தினார்.

    சகாய பிரதீஷ்டனின் கோரிக்கையை ஏற்க மறுத்த பெண், இனி வீட்டிற்கு வரவேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சகாய பிரதீஷ்டன், அந்த பெண்ணுடன் எடுத்து கொண்ட ஆபாச படங்களை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு சமூக வலை தளம் மூலம் அனுப்பினார். அதனை பார்த்த உறவினர்கள் மற்றும் கணவர் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் இது பற்றி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் பொன். கீதா ஆகியோர் புகார் மீது விசாரணை நடத்தினர்.

    பின்னர் இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி கற்பழித்ததாக சகாய பிரதீஷ்டனை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 376, 364 (சி), 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குறிஞ்சிப்பாடி அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ஏமாற்றி விவசாயி வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் திருடிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 47). விவசாயி. இவர் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

    குமாருக்கு ஏ.டி.எம். மூலமாக பணம் எடுக்க தெரியாததால் அங்கு பணம் எடுக்க வந்த மற்றொரு நபரிடம் குமார் தனது ஏ.டி.எம்.கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறினார்.

    உடனே அந்த நபர் குமாரின் ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ஏ.டி.எம்.எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முயன்றார். அந்த எந்திரத்தில் பணம் வரவில்லை எனக்கூறிவிட்டு அங்கிருந்த மற்றொரு எந்திரத்தில் குமாருக்கு பணம் எடுத்து கொடுத்தார். உடனே குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

    பின்னர் அந்த நபர் ஏற்கனவே பணம் வரவில்லை எனக்கூறிய ஏ.டி.எம்.எந்திரம் மூலம் குமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து குமார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு சென்றபோது அவரது வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் குறைவாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் வங்கி அதிகாரியிடம் கேட்ட போது, அவர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    இதைகேட்ட அதிர்ச்சியடைந்த குமார் குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம்.எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை ஆய்வு செய்தபோது அதில் குமார் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய அந்த நபர் முகம் பதிவாகியிருந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த மர்மமனிதரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீழ்அனுவம்பட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(31) என்பதும், அவர் என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×