search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode By Poll"

    • கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிப்பு.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியா ? புறக்கணிப்பா ? என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், "நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் கையை விரித்து விட்டார். மத்திய அரசு தான் நீட் தேர்வை ரத்து செய்யமுடியும் என்று முதலமைச்சர் தற்போது கூறுகிறார். நீட் தேர்வு ரத்து என்று கூறி மாணவர்கள், பெற்றோர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது" என்றார்.

    மேலும், தந்தை பெரியாருக்கு எதிராக பேசிய சீமானுக்கு கண்டனம் தெரிவித்தார். திமுக ஆட்சி மீடு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் அடுக்கினார்.

    இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை என தெரிவித்துள்ளது.

    அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    " ஏற்கனவே நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது.

    பணம், மது, தங்கக்காசு, சொலுசு, குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    அராஜகங்கள், வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள்.

    மேலும், சட்டம்றற- ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் பாக்யராஜ் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஈரோடு பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் அவரை களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
    • நடிகர் பாக்யராஜை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அணுகியதை அவருக்கு நெருக்கமானவர் இன்று உறுதிபடுத்தினார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான இளங்கோவனுக்கு சவால் விடும் வகையில் வேட்பாளரை நிறுத்தி கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மும்முரமாக உள்ளனர்.

    தி.மு.க.வுக்கு அடுத்த படியாக அதிக வாக்குகளை பெற வேண்டும் என்பதிலும் அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு நிறுத்தும் வேட்பாளரை விட அதிக செல்வாக்கு பெற்ற வேட்பாளரை களத்தில் இறக்க வேண்டும் என்று வியூகம் வகுத்து உள்ளனர்.

    அதன்படி அவர்கள் கடந்த சில தினங்களாக நடிகர் பாக்யராஜை போட்டியிட வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நடிகர் பாக்யராஜ் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஈரோடு பகுதி மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் அவரை களம் இறக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    நடிகர் பாக்யராஜை ஓ.பன்னீர் செல்வம் அணியினர் அணுகியதை அவருக்கு நெருக்கமானவர் இன்று உறுதிபடுத்தினார். ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடும் மனநிலையில் பாக்யராஜ் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். வலுவான வேட்பாளரான இளங்கோவனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று பாக்யராஜ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

    அதேசமயத்தில் அ.தி.மு.க.வின் அனைத்து தலைவர்களும் ஒன்றுபட்டு நின்றால் தேர்தலில் களம் இறங்க தயார் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் பாக்யராஜை சம்மதிக்க வைக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மூத்த தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    என்றாலும் நடிகர் பாக்யராஜ் இடைத்தேர்தலில் களம் இறங்க தொடர்ந்து தயக்கத்துடன் உள்ளார். அவர் போட்டியிட திட்டவட்டமாக மறுத்தால் வேறு ஒருவரை தேர்வு செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தயாராகி வருகிறார்கள்.

    ×