என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode Collector"
- கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் தொலைக்காட்சி சாதனங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இன்று காலை சுமார் 7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை.
ஈரோடு:
ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக மத்திய மற்றும் மாநில போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு வசதியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் தொலைக்காட்சி சாதனங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் வேட்பாளர்கள் பிரநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் 24 நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இருப்பு அறையின் வெளிப்புற பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஒளிப்பதிவுகள் தெரியும் வண்ணம் கூடுதலாக தொலைக்காட்சி சாதனங்கள் வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றதன் பேரில் ஈரோடு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வேட்பாளர் பிரநிதிகளுடன் ஆய்வு செய்ததில் இருப்பு அறையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பழுதேதும் இல்லாமல் செயல்பட்டு வந்ததும், இருப்பு அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. காட்சிப்பதிவுகள் இருந்துள்ளதும், இருப்பு அறையில் இருந்து அட்மின் பிளாக்கில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டு வேட்பாளர்களின் பிரநிதிகளுக்கு விளக்கப்பட்டது.
பின்பு சி.சி.டி.வி. இணைப்புகள் சரி செய்யப்பட்டு காலை 9 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சி.சி.டி.வி. பதிவுகள் முழுமையாக தெரிந்தது.
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி சுந்தரி (வயது 59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பவானி அரசு மருத்துவமனையின் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதிலிருந்து கிடைத்த தொகை மட்டும் வங்கிகளில் கடன் பெற்று ரூ.22 லட்சம் மதிப்பில் பவானி அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 9 சென்ட் நிலத்தை வாங்கி 2009-ஆம் ஆண்டு புதிதாக வீடு ஒன்றை கட்டி அதில் வசித்துள்ளார்.
இந்நிலையில் 2015 -ம் ஆண்டு செல்லமுத்துவுக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவ வசதிக்காக குடும்பத்துடன் 2015-ல் செல்லமுத்து ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் 2019 -ம் ஆண்டு செல்லமுத்து உடல்நலம் சரியில்லாமல் இறந்தார்.
அதன்பின் சுந்தரி பவானி தொட்டிபாளையத்தில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தங்கலாம் என்று சென்று உள்ளார். ஆனால் அங்கு வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு இடித்து அகற்றப்பட்டதுடன், நிலத்திற்கான எல்லைக் கற்களும் இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் வருவாய்த்துறையில் ஆவணங்களை சரிபார்த்த போது அந்த இடம் வேறொருவரின் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில், தனது வீடு மற்றும் நிலத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும் சுந்தரி மனு அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் புகார் குறித்து கள விசாரணை நடத்த ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச்சேர்ந்த கூலி தொழிலாளியான செங்கோட்டையன் ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கதிரவனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
கொடுமுடி ஒன்றியம் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட வேப்பம்பாளையம் அருகே மதுபானக்கடை கட்டும் பணி நடந்து முடிந்துள்ளது இருப்பினும் இன்னும் அந்த பகுதியில் மது கடை திறக்கப்படவில்லை.
நான் ஒரு கூலித்தொழிலாளி தினமும் மது அருந்தும் பழக்கம் உடையவன் தற்போது மதுகுடிக்க பத்து கிலோ மீட்டர் வரை சென்று மதுஅருந்தி வருகிறேன். இதனால் பஸ் செலவு அதிகமாகிறது. இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் மடக்கி கேஸ் போடுகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் மதுபானக் கடையை திறக்க வேண்டும் இல்லை என்றால் எனக்கு பஸ்சில் சென்றுவர பஸ் பாஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை பார்த்த அதிகாரிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். #Drunkard
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஓவியா, அனு என்ற 2 திருநங்கைகள் கையில் ஒரு மனுவுடன் கண்ணீருடன் வந்தனர்.
கண்ணீர் சிந்தியபடி கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்தி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் எங்களை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கேட்டால் போலீசார் எங்களை தரக் குறைவாக பேசுகிறார்கள்.
மேலும் எங்கள் உறவினர் மீது உள்ள ஒரு வழக்கு தொடர்பாகவும் எங்களுக்கு போலீசார் ரொம்பவும் டார்ச்சர் கொடுக்கிறார்கள்.
போலீசார் கொடுக்கும் டார்ச்சரால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆகவே எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த 2 திருநங்கைகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுக்க வந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்