search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode heavy sun"

    ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில் வெயிலின் தாக்கம் தாக்க முடியாமல் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே கடும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியதும் மேலும் கூடுதலாக வெயில் கொளுத்தி வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 104 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவு தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது.

    வெயிலை தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சில மக்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பார்க்க சென்ற வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், சர்பத், மோர், இளநீர் ஜூஸ் கடைகளில் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    காலை 9 மணி முதலே அனல் காற்றுடன் வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. வீட்டில் மின்விசிறி போட்டாலும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வரும் 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் கொளுத்த உள்ளதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    ×