என் மலர்
நீங்கள் தேடியது "Essaki Amman Temple"
- இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது.
- நேற்று மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை மெயின் ரோட்டில் சண்முகவிலாஸ் ரைஸ் மில் அருகில் அமையப்பெற்ற ஸ்ரீ இசக்கி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்தேதி காலையில் கால் நாட்டு வைபவத்துடன் தொடங்கியது. 6-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் குடி அழைப்பு, மகா தீபாராதனை, நேற்று காலை 6 மணிக்கு மணிகண்ட பட்டர், ஆறுமுகநாத பட்டர் ஆகியோர் தலைமையில் எஜமானர் சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜணம், கும்பபூஜை, வேதபாராயணம், கணபதி ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தென்திருப்பேரை பஜாரில் அமைந்துள்ள சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனையுடன் மதியக்கொடை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் பொதுமக்கள் பொங்கலிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தரம் பிள்ளை, நடராஜ பிள்ளை மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.






