search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fakar zaman"

    • ஐசிசியின் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது அறிவிக்கப்பட்டது.
    • இந்த விருது பாகிஸ்தான் வீரர் பகர் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்திருந்தது.

    இதில் நியூசிலாந்தின் மார்க் சாம்ப்மென், இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் பாகிஸ்தானின் பகர் ஜமான் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

    இந்நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது பாகிஸ்தானை சேர்ந்த பக்கார் ஜமானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய், ஜிம்பாப்வேயின் கெலிஸ் நத்லோவ், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கவிஷா எகோடகே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருது தாய்லாந்தின் நருயெமோல் சாய்வாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 336 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 337 ரன்கள் எடுத்து வென்றது.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 129 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் லாதம் 98 ரன்னில் வெளியேறினார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் கடந்த ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் 65 ரன்னில் அவுட்டானார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 288 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 291 ரன்கள் எடுத்து வென்றது.

    ராவல்பிண்டி:

    நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.

    ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். #PAKvAUS
    ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சோஹைல் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஆனால் பகர் சமான் அதிரடியாக விளையாடி 42 பந்தில் 73 ரன்கள் குவித்தார். ஆசிப் அலி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.



    பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. கடந்த போட்டியில் சதம் அடித்த ஆரோன் பிஞ்ச் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆர்கி ஷார்ட் 28 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 7 ரன்னிலும், மேக்ஸ்வெல் 10 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது.

    விக்கெட் கீப்பர் கேரி 24 பந்தில் 37 ரன்கள் சேர்க்க 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×