search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake jewellery"

    • தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கினார்.
    • அதிர்ச்சி அடைந்த செரிஷ் உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

    ராஜஸ்தானை சேர்ந்த நகை கடை உரிமையாளர் அமெரிக்க பெண்ணிடம் ரூ. 300 மதிப்புள்ள போலி நகையை ரூ. 6 கோடிக்கு விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த செரிஷ் என்ற பெண் ஜெய்பூரில் உள்ள ஜோரி பஜாரில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை வாங்கியுள்ளார்.

    ரூ. 6 கோடி கொடுத்து வாங்கிய நகைகளை அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் செரிஷ் காட்சிப்படுத்த ஆயத்தமானார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது, செரிஷ் வாங்கிய விலை உயர்ந்த நகைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த செரிஷ், உடனே இந்தியா புறப்பட்டு வந்தார்.

    இந்தியாவில் தரையிறங்கிய செரிஷ் நேரடியாக நகை வாங்கிய கடைக்கு விரைந்தார். அங்கு கடையின் உரிமையாளர் கௌரவ் சோனியை சந்தித்து போலி நகை குறித்து விளக்கம் கேட்டார். செரிஷ்-இன் குற்றச்சாட்டுகளை கௌரவ் சோனி மறுத்துள்ளார். இதையடுத்து காவல் நிலையம் விரைந்த செரிஷ் கௌரவ் சோனி மீது புகார் அளித்தார்.

    மேலும், தனது புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செரிஷ் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் உதவி கேட்டார். பிறகு, அமெரிக்க தூதரகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் ஜெய்பூர் காவல் நிலையத்தில் கௌரவ் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கௌரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான கௌரவ் சோனியிடம் செரிஷ் பலக்கட்டங்களாக ரூ. 6 கோடி மதிப்பிலான போலி நகைகளை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    • நகை மதிப்பீட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர்.
    • போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூரில், அரியலூர்-திருச்சி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பிரதான கிளை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (வயது 39) மற்றும் அரியலூர் அஸ்வினாபுரம் பகுதியைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகி மணிமாறன் (39), பெரியார் நகரைச் சேர்ந்த ரமேஷ் (35) ஆகிய 3 பேரும் நகை அடமானம் வைக்க இந்த வங்கிக்கு வந்தனர்.

    மணிகண்டனும், மணிமாறனும் வங்கிக்குள் சென்று நகை மதிப்பீ ட்டாளரிடம் 20 பவுன் நகைகளை கொடுத்து அடமானம் வைக்க வந்ததாக கூறினர். ரமேஷ் வங்கிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார்.

    இதையடுத்து மதிப்பீ ட்டாளர் அவர்கள் கொடுத்த நகைகளின் உண்மை தன்மையை பரிசோதனைக்கு உட்படுத்தினார். அப்போது அது போலி நகை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மேலாளரிடம் உங்களுக்கு பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறிவிட்டு அந்த போலி நகைகளுடன் உதவி மேலாளர் செந்தில்குமார் கேபினுக்கு சென்றார். இதை அறிந்து ஆடிபோன செந்தில்குமார் சப்தமில்லாமல் அரியலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.

    பின்னர் நகை மதிப்பீட்டாளர் முன்பு அடமானத் தொகைக்காக காத்திருந்த தேமுதிக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மணிமாறன் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே போலீஸ் ஜீப் வருவதை கண்டதும் பெரியார் நகர் ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 20 பவுன் போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தேமுதிக ஒன்றிய செயலாளர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்தார்.
    • பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.

    கடலூர்:

    பண்ருட்டியை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர்பொன்னு சாமி தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது அடகு கடையில் கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்து ரூ14.500பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இவர் அடகு வைத்து பணம் வாங்கி சென்றது போலிநகை என்றும் தங்கமுலாம் பூசியது என்றும்தெரியவந்தது. இது குறித்து நகை அடகு கடை உரிமையாளர் கிஷோர் குமார் பண்ருட்டிபோலீசில்புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று விசாரணை நடத்தினர் விசார ணையில் பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.தீவிர விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பாத்தி மா லே அவுட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 38) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராஜேஷ் கண்ணனை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காரைக்காலில் 12 பவுன் போலி நகையை விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மிஷனில் வைத்து பார்த்த போது 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிப்பவர் கைலாஷ். இவர் காரைக்கால் பெரம சாமி பிள்ளை விதியில் நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசு ராமன் (வயது30). என்ற வாலிபர் சென்றார். இவர் 12 பவுன்தங்க செயின் தன்னிடம் இருப்ப தாகவும், அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுவதால், அதனை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதன்பேரில், கைலாஷ், நகையை கேரட் சரி பார்க்கும் மிஷனில் வைத்து பார்த்த போது, 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது. ஆனால், உரசி பார்க்கும்போது சந்தேகம் எழுந்ததால், தனது பெரி யப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்தார். பாலமுரளி அவசரப்பட்டு பணத்தை கொடுத்துவிடாதே, நான் வந்து பார்க்கிறேன் என கூறி, ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித்தார்.

    அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரியில் தற்போது 12 பவுனுக்கு பணம் இல்லை. நாளை வந்தால் மொத்தமாக தருகிறோம் என கூறி, பரசுராமனை சந்தேகம் வராதபடி சாதுர்யமாக அனுப்பிவைத்தனர். காரைக்கால் மாவட்டத்தில், இது போல் போலி தங்க நகைகளை விற்பனை செய்யும் நபர்கள் சுற்றிவருவதால், ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்து, பரசுராமை கையும் களவுமாக பிடித்து, போலீ சில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    மறுநாளான பணம் வாங்கும் சந்தோசத்தில் வந்த பரசுராமனை, கைலாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பிடித்து, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பொக்டர்கள் முத்துசாமி, மோகன் மற்றும் போலீசார் நகைக்கடைக்கு சென்று, பரசுராமனை கைது செய்தனர். பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லா புரத்தை சேர்ந்த ஒரு வாலி பர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    ×