search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "falling in price"

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கு விற்பனையானது. தற்போது விஷேச நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால் வாழைத்தார்கள் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், மற்றும் மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர் மோகனூர் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    சந்தைக்கு வீட்டில் வளர்க்கும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாட்டுக் கோழிகளுக்கு இப் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வர். தரமான நாட்டு கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டும், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு குறைந்த அளவிலே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தையில், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளும் வெளிச்சோடி காணப்பட்டது.

    ×