search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fasting struggle"

    • புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
    • இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எங்களின் ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

    அரியலூர் 

    அரியலூர் கீழப்பழுவூர்: அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த தூத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது தூத்தூர், குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில், தற்போதைய தி.மு.க. அரசு அதனை ரத்து செய்து ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிப்பதால், தங்களது நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டி தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று குருவாடி கிராமத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தொடர்ந்து இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எங்களின் ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்


    • வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
    • புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்றது

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அசோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு வக்கீல்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பரிசுத்தநாதன், ராஜசேகர், அழகன், சிவா, மகாலிங்கம், ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது.
    • கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே எரிச்சி ஸ்ரீமெய்யர் அய்யனார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது. எரிச்சி, சிதம்பரவிடுதி, நற்பவளக்குடி, வடவயல், ஆமாங்குடி, குன்னக்குரும்பி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வழிபடுகின்ற இக்கோயிலானது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் கோயில் பழமையானதால், சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிலர் கோவில் தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் கோவில் திருப்பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

    அப்போது மெய்யர் அய்யனார் ஆலயத்தின் திருப்பணிகளை விரைந்து முடித்து அனைத்து மக்களும் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது. போராட்டத்தில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அரவக்குறிச்சி தொகுதி உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், மேம்பாட்டையும், முற்றிலுமாக புறந்தள்ளி அவர்களை வஞ்சிக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் அரசின் மக்கள் விரோத நிலையை சுட்டிக்காட்டும் வகையில், கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 3-வது நாளான நாளை (திங்கட் கிழமை) மாலை 4 மணிக்கு வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் நடை பெறவிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVDhinakaran

    ×