search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flooding around houses"

    • தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது. கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரங்கி பேட்டை, கீரப்பாளை யம், குமராட்சி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது தவிர கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர், கரும்பு, வாழை, ஊடுபயிர் ஆகியவை தண்ணீரால் சூழ்ந்துள்ளது.

    கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 200 வீடுகள் சேதமாகி உள்ளது. 8 கால்நடைகள் இறந்துள்ளது. 7 இடங்களில் மின்கம்பம் சாய்ந்துள்ளது. ஒரு இடத்தில் மரம் முரிந்துள்ளது. தொடர் மழை காரண மாக கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்து ள்ளது. இந்த பகுதியில் உள்ள தண்ணீரை ராட்சத குழாய் மூலம் பம்பிங்செய்து மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய வாரியாக தோட்ட க்கலை, பொதுப்ப ணித்து றை, வருவாய்துறை அதி காரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ×