என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flyover is planned"
- பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது.
- கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
கோவை
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதிகள் முக்கியமானதாகும்.
இந்த சாலைகளின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்புப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பெரியநாயக்கன் பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில் 48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரம் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில், 14 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதில் பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந் தேதியும், ஜி.என்.மில்ஸ் சந்திப்பில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதியும் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 2 இடங்களிலும் மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மேம்பாலம் பணிக்காக வண்ணான்கோவில் அருகே மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெ ரியநாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ் பாலத்தின் கட்டுமானப் பணிகளையும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பெரிய நாயக்க ன்பாளையம் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி எல்.எம்.டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான்கோவில் சந்திப்பில் முடிகிறது.
இந்த பாலத்தால் 3 சந்திப்புகளிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கை யில் தூண்கள் அமைக்க ப்பட்டுள்ளன. அவற்றின் மீது தளம் அமைப்பதற்காக, 48 எண்ணிக்கையிலான தளங்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதில் 15 தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 33 தளங்கள் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இம்மேம்பாலத்தின் கட்டுமானப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள ஜான் பாஸ்கோ சர்ச் அருகே தொடங்கி ஜி.என்.மில்ஸ் சந்திப்பை கடந்து வெள்ளக்கிணறு பிரிவில் முடிவடைகிறது.
இந்த பாலத்தின் கட்டுமானப் பணியில் தற்போது 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. தூண்கள், மேல் தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. அருகே சர்வீஸ் சாலைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. நடப்பாண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்