என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "For 9 students"
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் குருசாமிபாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ளனர்.
நேற்று 24 மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு காலையில் முள்ளங்கி சாம்பார் சாதம் போடப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்டு விட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.
இந்த நிலையில், விடுதியில் சாப்பிட்டு சென்ற மாணவர்களில் சிலருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட 9 மாணவர்களை பிள்ளால்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பிள்ளா நல்லூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் தவசீலன் தலைமையில் விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் மற்றும் பள்ளிக்குச் சென்றிருந்த மாணவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
கெட்டுப்போன உணவு காரணமாக மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டி ருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே தரமற்ற உணவு வழங்கியதால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
இதை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆதிதிரா விடர் நல அதிகாரி சுகந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை பார்த்து நலம் விசாரித்தார். மேலும் அவர் விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார். ராசிபுரம் ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சிகிச்சை பெரும் மாணவர் களை சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதேபோல் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் டாக்டர் சரோஜா, மாணவர்களை சந்தித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் பிஸ்கட், பழங்கள் கொடுத்து நலம் விசாரித்தார். அவர் மாணவர்கள் தங்கி இருந்த விடுதிக்குச் சென்று அவர்களுக்கு வழங்கப்படும் உணவு போன்றவற்றை பரிசோதித்தார். ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேம்பு சேகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் தனபால், ராமசாமி ஆகியோரும் சென்று நலம் விசாரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்