search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "freedom fighters"

    • நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார்.
    • மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து  தொண்டர்கள் வருகை தந்துள்ளனர்.

    நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ள நிலையில் விஜய் தற்போது மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளார். நடந்துவரும் பாதையின் இருபுறமும் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தவெக கட்சிக் கொடி வடிவிலான துண்டுகளை மேடை மீது அவர்கள் வீசினர். அதை அன்போடு எடுத்து தனது தோளில் அணிந்துகொண்டார்.

    அவ்வாறு வீசப்பட்ட கொடிகள் பலவற்றை எடுத்து தனது தோளில் அவர் போட்டுக்கொண்டது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பாதுகாவலர் ஒருவரும் உற்சாக மிகுதியில் நடைபாதை மேடையில் ஏறி விஜய்க்கு சல்யூட் அடித்த சம்பவமும் நிகழ்ந்தது.

    நடைபாதையிலிருந்து நிகழ்ச்சி மேடையில் ஏறிய விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மாமன்னர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
    • கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு.

    ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சியை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமிர்த பெருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    சிவகங்கையில் விடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரின் புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வமணி, கோபி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
    • இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் இன்று அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

    இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் சத்தியா, முன்னாள் கவுன்சிலர் வீரையன், ஒன்றிய செயலாளர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பகம் ஆனந்த பிரபு நன்றி கூறினார்.

    டெல்லி ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுதந்திர போராட்ட தியாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். #FreedomFighters
    புதுடெல்லி:

    ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒன்று வெள்ளையனே வெளியேறு போராட்டம். இந்த போராட்டம் 1942, ஆகஸ்டு மாதம் 9-ம் தேதி நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு அவர்கள் தாயகம் திரும்பினர். அன்றிலிருந்து வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 76வது நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

    தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுமார் 89 சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர்  மோடி, சுதந்திர போராட்ட  தியாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளுடன் கலந்துரையாடினேன். அவர்கள் நாட்டிற்கு செய்த மாபெரும் தியாகத்தை நினைவு கூர்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.
    ×