search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganja sellers"

    • போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.
    • 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.

    அதில் வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது33), கவுதம் (33), குரங்குமாயன் தெருவை சேர்ந்த கார்த்திக் (29), சூரியன் (34) ஆகியோர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். போலீசார் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர்.

    இதேபோல் கூடலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பாலு (71) என்பவர் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    • போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடத்தல் கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக போடி நகர் மற்றும் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றனர். வேட்டவராயன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து அங்கு நின்றிருந்தவர்களிடம் ஒரு கும்பல் பேசி கொண்டிருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் போடியை சேர்ந்த முத்துராசு, வினோத்குமார், மயிலாடும்பாறையை சேர்ந்த பாலமுருகன், ஜெகன், கலைவிநாயகர் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜோதி என்ற பெண்ணையும் ேபாலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் போடி தாலுகா போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஈஸ்வரன், அஜித் பாண்டியன், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த 2 கும்பலிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தனர். யாருக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் வேறு எங்கும் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளனரா என்பதை மோப்பநாய் கொண்டு தேடி வருகின்றனர்.

    • கடமலைக்குண்டு பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி உள்ளதாக எஸ்.பி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

    வருசநாடு:

    ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறையை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவரது மகன் வைஷ்ணவ்குமார். இவர்கள் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஆந்திராவை சேர்ந்த ராஜலட்சுமி என்பவரிடம் கஞ்சா மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அதன்படி 10 கிலோ கஞ்சா அவரிடம் பெற்று தேனியை சேர்ந்த சதீஸ்குமார், திருப்பூரை சேர்ந்த உமா, அழகர், கம்பத்தை சேர்ந்த சங்கிலி, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஸ் ஆகியோருக்கு தலா ஒரு கிலோ விற்பனை செய்துள்ளனர்.

    மீதி 5 கிலோவை கடமலைக்குண்டு பகுதியில் உள்ள வீட்டில் பதுக்கி உள்ளதாக எஸ்.பி தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இதில் வீட்டில் பதுக்கிய 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தெய்வேந்திரன் மற்றும் வைஷ்ணவ் குமாரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கஞ்சா பெற்ற பெண் மற்றும் விற்பனை செய்த நபர்கள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பஸ் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார்.

    அவர் கலைமோகன் (வயது25) என்பதும், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய செல்வேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

    தென்கரை போலீசார் மயான பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த காமாட்சி (32) என்பவரை கைது செய்தனர்.

    • நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 4 பேரை கைது செய்து 8 ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து பிரிவில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகனச் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது நிலக்கோட்டை குண்டலபட்டி பிரிவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான கார்த்திக்(34), அவரது மனைவி பாண்டி மீனா(32). மற்றும் அதேபகுதியைசேர்ந்த டீ மாஸ்டர் செண்பகராஜ்(34), கார்த்தியின் தங்கை சித்ராதேவி(31). ஆகிய 4 பேர்களும் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவரிகளிடம் சோதனை செய்து பார்த்தபோது 8 ½ கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் கோம்மை சாலை நாககன்னியம்மன்கோவில் அருகே ரோந்து சென்றனர்.
    • 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்கு போலீசார் கோம்மை சாலை நாககன்னியம்மன்கோவில் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

    விசாரணையில் அவர் பாண்டியன்(67) என்பதும் கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விஜயன், ஜெகன்நாதன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்

    திண்டுக்கல் :

    நிலக்கோட்டை அருகில் உள்ள திரவியம் நகரை சேர்ந்த பெருமாள் மகன் தென்னவராஜ்(24). இவர் நிலக்கோட்டையில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை 15 நாள் சிறையில் அடைத்தனர்.

    வத்தலக்குண்டு மயானசாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே பெட்டிக்கடை வைத்துள்ளார். வத்தலக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்லா தலைமையிலான போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர்.

    அப்போது குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதனைதொடர்ந்து செல்வராஜை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.







    ×