search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbage Free"

    • தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    இதில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினமும் 600 முதல் 700 டன் குப்பைகளை அகற்றி வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை 100 சதவீதம் செயல்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வழங்கும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பணியாற்ற வேண்டும். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் , சிக்கண்ணா அரசு கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என மொத்தம் 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா, மாநகர் நல அதிகாரி (பொறுப்பு) கார்த்திக், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

    ×