search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GARBAGE FREE TAMILNADU-MINISTER INFORMS"

    • குப்பையில்லா தமிழகத்தை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
    • நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ல . இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் இன்று (21-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று சிறப்பு சுகாதார முகாமான 'நம்ம ஊரு சூப்பரு' திட்ட செயல்பாட்டினை தொடங்கி வைத்து பேசியதாவது:

    நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாஸ் கிளீனிங் என்ற திட்டம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தன்னார்வலர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழுக்கள் இணைந்து மாஸ் கிளீனிங் செய்கிறார்கள். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பிரித்து பெறப்படுகிறது.

    அந்த வகையில் கிராமப் பகுதிகளும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஊரகத் துறை சார்பில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் நோக்கமானது ஊரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.குடிநீரில் கழிவுகள் கலக்கக்கூடாது.

    சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதாகும். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பப்பாளி மற்றும் முருங்கைக் கன்றுகளை இங்கு வழங்குகிறோம்.

    நம்மால் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியவில்ல . இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பிளாஸ்டிக் மக்குவதில்லை. இந்தியாவில் இந்து நகரில் நகராட்சி துறை சார்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை எரிபொருளாகவும் மாற்றுகிறார்கள்.

    இந்த திட்டத்தை அறிந்து கொள்ள நமது பேரூராட்சி தலைவர்கள், அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் சென்று திரும்பி இருக்கிறார்கள். அந்த முறை வரும்போது குப்பைத்தொட்டியே இருக்காது.

    உற்பத்தியாகும் இடத்திலேயே அதனை பிரித்து மக்காத குப்பைகளை மின்சாரம் தயாரிக்கவும், மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து உங்களுக்கே வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதில் குப்பைக்கு பணம் தந்து பெற்று விடுகிறார்கள். இன்றைக்கு தமிழகத்தில் நகர்ப்புறங்களில் 55 சதவீத மக்கள் வசிக்கிறார்கள். இருந்த போதிலும் ஊரகத் துறைக்கு தமிழக அரசு ரூ.26 ஆயிரம் கோடி நிதியினை ஒதுக்கியுள்ளது.

    கிராமப்புறங்களில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடு தோறும பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, ந.தியாகராஜன், ப.அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே.பிச்சை, ஒன்றியக் குழுத் தலைவர் ச.துரைராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×