search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Relief Fund"

    • கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.
    • மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன்.

    கோவை:

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது79). இவர் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார்.

    யாசகம் பெறும் பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணத்தை வழங்குவதையும், கிராமப் புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி தருவதை கடமையாக செய்து வருகிறார்.

    இந்நிலையில் யாசகரான பூல்பாண்டியன் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அங்கு மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து யாசகர் பாண்டியனை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பாராட்டினார். இது குறித்து யாசகரான பாண்டியன் கூறியதாவது:-

    மும்பை செம்பூரில் வசித்து வந்த நான் கடந்த 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு, யாசகம் பெற்று பிழைப்பு நடத்த தொடங்கினேன். இந்த யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை நான் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

    இதனை எனது சொந்த மாவட்டமான தூத்துக்குடி அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் உபகரணங்கள் வாங்கிக்கொள்ள நிதி உதவியாக அளித்தேன். இதுவரை 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்துள்ளேன். மேலும் ரூ.58 லட்சம் வரை நன்கொடையாகவும், பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளேன். இதில் தான் எனக்கு பெரும் நிம்மதி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து பயனாளிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ேமாகன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்தமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் முதல்-அமைச்சரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விக்கிரவாண்டி வட்டம் தென்னமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஆகாஷ் (வயது 7) நீரில் மூழ்கி இறந்ததையொட்டி அந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியாக முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியின்கீழ் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தங்கராஜ் என்பவரிடம் மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, தனித்துைண கலெக்டர் (ச.பா.தி) விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×