என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "government offices"
- சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
- ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
சில மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.
- இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர்:
மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு சேவைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு வரியினங்கள் செலுத்துதல், சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் இ - சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில், வரியினங்களை செலுத்த கிராமப்புறங்களில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக இணையதள வசதி போதுமான அளவு வேகம் இல்லாததால், காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்தை பதிவு செய்யவும் நீண்ட நேரம் ஆகிறது. காத்திருக்கும் மக்கள் வேறு வழியின்றி, நகரிலுள்ள இ - சேவை மையங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, கிராமப்புறங்களிலுள்ள, இ - சேவை மையங்கள், ஊராட்சி அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மத்திய அரசு திட்டத்தின் கீழ், கேபிள் வாயிலாக கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணைய தள இணைப்பு வழங்க பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் வாயிலாக நகரங்களில் இருந்து, உடுமலை பகுதி கிராமங்களுக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
- திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
சென்னை:
தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.
திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
- ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் 13.4 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சம் சதுர அடியில் அரசு மாளிகையாக பிரம்மாண்டமாக ராணிப்பேட்டை புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் வருவாய் பிரிவு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கருவூலம் அலுவலகம் மற்றும் சம்பள பிரிவு, மக்கள் குறைதீர்வு அரங்கம், மக்கள் தொடர்பு அலுவலகம், எல்காட் பிரிவு அலுவலகம் இயங்கவுள்ளது.
முதல் தளத்தில் மாவட்ட கலெக்டர் அறை, சிறு கூட்டரங்கம், மாவட்ட வருவாய் அலுவலர், சிடிஇ பிரிவு அலுவலகம், கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் பொது, தேர்தல், கணக்கு ஆகியோரின் அலுவலகங்கள், கலந்தாய்வு அரங்கம், தேர்தல் மற்றும் வருவாய் அலுவலகம் ஆகியவை இயங்கும், இரண்டாம் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், திட்ட இயக்குனர் அறை, கூட்டரங்கம், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மாவட்ட ஊரகப்பிரிவு தேர்தல் அலுவலகம், மதிய உணவு நேர்முக உதவியாளர் பிரிவு அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், சிறு கூட்டரங்கம், கலந்தாய்வு அரங்கம், திட்ட இயக்குனர் (ஐசிடிஎஸ்) அலுவலகங்கள் இயங்கவுள்ளன.
மூன்றாம் தளத்தில் கூட்டுறவு சங்க இணை இயக்குனர், பதிவுத்துறை அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் பிரிவு அலுவலகம், கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலகம், சுகாதாரப் பிரிவு இணை இயக்குன அலுவலகம், மகளிர் திட்ட அலுவலர் அலுவலகம் இயக்கப்படவுள்ளது. நான்காம் தளத்தில் வனத்துறை அலுவலகம், சிறு கூட்டரங்கம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆரம்ப கல்வி அலுவலர், ஆதிதிராவிட நலத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய போட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ் வளர்ச்சி துறை, கனிம வளத்துறை, அலுவலகங்கள் மற்றும் கூட்டரங்கம் இயங்கும். கலெக்டர் அலு வலகத்தில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 12 லிப்ட், மாற்றுத்தி றனாளி களுக்கான சாயதள வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, செயற்கை நீர் ஊற்று ஆகியவையும் கட்டிடத்தில் உள்ளன.
கலெக்டர் அலுவலகம் வரும் மக்களுக்காக உணவகம், அடிப்படை வசதிகள் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்ப ட்டுள்ளது. புதிய கலெக்டர் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறக்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி 110-ன் மூலம் தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி இத்திட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பொருட் களின் பயன்பாட்டை தடை செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கலெக்டர் சாந்தா தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைக்கும் வகையிலும், அதற்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும், தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை குறைத்தல் தொடர்பான பயிற்சி பட்டறை வகுப்பில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடைமுறை சாத்தியங்கள் குறித்தும், மாற்று பொருட்கள் பயன்பாடுகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த அரசு அலு வலர்களும், பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை அனைத்து அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் அரசு அலுவலகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக விளங்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் சசிகலா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்