search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt arts college"

    • அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்றாலும் பி.காம் பாடப் பிரிவுக்கு அதிகளவில் விண்ணப்பித்தனர். இன்று முதல் 30-ந் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு உள்ள ஒதுக்கீட்டு இடங்களை விட ஒருசில கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் வந்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஜூன் 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அதைவிடுத்து 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது.

    அரசு கலைக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. ஆனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கலித்தீர்த்தால் குப்பம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.

    இக் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இளங்கலை பட்டப் படிப்பில் 3 ஆண்டுகளுக்கு பதிலாக 4 ஆண்டுகள் நீட்டிப்பு செய்தும் தமிழ் மொழியை முற்றிலுமாக நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியின் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மாணவர்களின் திடீர் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செஞ்சி அரசு கலைக் கல்லூரியில் 17-ந் தேதி 2-ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
    • விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்காக முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அன்று பி.ஏ. ஆங்கில பிரிவுக்கும் 18 ஆம் தேதி பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் 22-ந் தேதி தேதி பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும் 23ஆம் தேதி பி.ஏ தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது, மேலும் விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஜூலை 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையதள முகவரியைப்பயன்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டின், இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.அவ்வகையில் வரும் 27 முதல் ஜூலை 15-ந் தேதி வரை, ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது அதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஜூலை 7-ந்தேதி வரை விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, www.tngasa.in மற்றும் www.tngasa.org இணையதள முகவரியைப்பயன்படுத்த வேண்டும்.ஏதேனும் சந்தேகம் இருப்பின்கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.

    இத்தகவலை கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    • உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப்பட்ட படிப்பு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.

    இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.அவ்வகையில் அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த சேர்க்கை இடம்பெறுகிறது.

    இப்பாடப்பிரிவுகளில் சேர விரும்புவோர் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக வரும் 27-ந் தேதி முதல் ஜூலை 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அவரவர் தங்களது பெயர், இமெயில் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால் போதுமானது. அதேபோல விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதனை, சேர்க்கை நடைபெறும் நாளில் கல் லூரிக்கு எடுத்து வர வேண்டும்.

    விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.இதேபோல, மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்று பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல், சேர்க்கை நடைபெறும் நாட்கள் குறித்த விபரங்கள், www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.

    • கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணமூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மற்றும் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×