search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus collision"

    • வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியிலிருந்து திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் வழியாக தாராபுரத்துக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் ஈரோட்டிலிருந்து வெள்ளக்கோவில் நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது முத்தூா் - வெள்ளக்கோவில் சாலை அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியாா் பேருந்து மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் 2 பேருந்துகளும் சேதமடைந்தன. 5 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    சேலம்:

    கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஒரு அரசுப் பேருந்து வந்தது. காலை 6.30 மணி அளவில் சேலம் 3 ரோடு ஜவகர் மில் எதிரில் வந்தபோது அங்கு ஒரு ஷெட்டில் நிறுத்தி இருந்த கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதை மீட்பதற்காக பயன்ப டுத்தப்படும் கிரேன் சாலையின் குறுக்கே வந்து திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கர மாக மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் கோவிந்தராஜ் மற்றும் டிரைவர் ஜோதி வெங்கடேசன் (50 ) உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.மேலும் கிரேனை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த டிரைவர் சந்தன ராஜ் (48 ) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சாலையின் குறுக்கே கிரேன் வருவதை அறிந்த அரசு பேருந்து ஓட்டு நர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×