என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » GRIEVANCE MEETING OF GAS CONSUMERS
நீங்கள் தேடியது "GRIEVANCE MEETING OF GAS CONSUMERS"
- தொட்டியம் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெறுகிறது.
- தொட்டியம் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன் பெறலாம்.
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொட்டியம் தாசில்தார் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20-ந்தேதி சனிக்கிழமை மதியம் 3 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தொட்டியம் வட்டாரத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தொட்டியம் வட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர், அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறைபாடுகளை தெரிவித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
X