என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "have a darshan of Sami at"
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.
- இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 14-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றது. அப்போது 963-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.
கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி மலை மீதுள்ள முருகன் கோவிலில் இருந்து முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி சூரனை வதம் செய்ய சாமி புறப்பாடு நடந்தது.
இதையடுத்து முருகப்பெ ருமானுக்கு சிறப்பு அலங்கா ரம், பூஜைகள் செய்யப்ப ட்டது. பின்னர் 4 ராஜா வீதிகள் வழியாக முருகப்பெ ருமான் சூரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து திருக்கல்யாண வைபோகம் கைலாசநாதர் திருக்கோவிலில் நடைபெற்றது.
அப்போது முருக ப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை சுவாமிகள் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மண மேடையில் திருக்கல்யாணம் நடந்தது.
இதில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாதசிவச்சாரி யார் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண உற்சவத்தினை நடத்தினார்.
அதை தொடர்ந்து மகா தீபாரா தனை நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.