search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head-on collision"

    • அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் நேருக்கு நேர் மோதி விபத்தானது.
    • இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஒரு டவுன் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டது. இந்த பஸ் காவிலி பாளையம், உக்கரம், பெரியூர் வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்றது.

    இதே போல் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனி பஸ் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றது.

    அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பனியன் கம்பெனி பஸ் ஆகியவை பெரியூர் பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதே போல் தனியார் பனியன் கம்பெனி பஸ்சின் முன்பகுதியில் சேதமானது.

    இந்த விபத்தில் தனியார் பனியன் கம்பெனி பஸ்சில் இருந்த வளர்மதி (42), தேவி (49), தனலட்சுமி (43), சரசாள் (35), நாகராஜ் (43), ரங்கம்மாள் (70), கந்தசாமி (48), ஆம்ஸ்ட்ராங் (50) உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.
    • ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிலேட்டர்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவர் சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து சேனிடோரியம் செல்லும் வழியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரங்குசாமி என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாரத விதமாக ரங்குசாமியின் மோட்டார்சைக்கிள் சரவணன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டதில் சம்பவயிடத்திலேயே பலியானார்.

    ரங்கசாமி என்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.
    • 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்தலிங்கம் (19). கூலி தொழிலாளியான இவர் பர்கூரில் இருந்து அந்தியூரக்கு வந்தார்.

    இதையடுத்து அவர் மீண்டும் சொந்த ஊரான ஊசிமலைக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாமரைக்கரை என்ற இடத்தில் ஊசிமலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் (52) என்ப வர் சித்தலிங்கம் வந்த இரு சக்கர வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அவர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.

    தொடர்ந்து அவர்கள் இருவரும் பர்கூர் அருகே ஆலமரத்து வளைவு என்ற இடத்தில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு மினி லாரி வந்தது. அப்போது எதிர்பா ராத விதமாக மினி லாரி மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

    இதில் இரு சக்கர வாக னத்தில் வந்த சித்தலிங்கம் மற்றும் சின்னப்பையன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் சித்தலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நிலை யில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சின்ன பையனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அங்கி ருந்தவர்கள் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் விபத்தில் இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் ஊராட்சி கோட்டை கே. என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகன் ஹரி கேஸ்வரன் (22). விமான பணிக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதற்காக பவானியில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    தொடர்ந்து அவர் நம்பியூர் அருகே உள்ள பூச்ச நாயக்கன்பாளையம் பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக எதிரில் ஒரு டிப்பர் லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் கார் நொறுங்கி இருபாடுகளில் சிக்கி ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹரிகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.
    • இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே ராஜன் நகரில் இருந்து புளியம்பட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் என்கிற ராஜா என்பவர் சம்பவத்தன்று இரவு லோடு ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூர் செல்வ தற்காக சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் லாரியை ஓட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில் இரவு சுமார் 12.30 மணியளவில் பெருமுகை தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் லாரி வந்த போது எதிரே அந்தியூரை சேர்ந்த தங்கவேல் என்பவர் ஓட்டி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் 2 லாரி டிரைவர்களுக்கும் காலில் பலத்த காயமடைந்தது. இதனையடுத்து உடனே அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதிக்க ப்பட்டனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை செய்தனர். இதில் 2 லாரியின் முன்பக்கமும் சேதமானது.

    மேலும் அந்தியூரில் இருந்து ஓட்டி வந்த லாரி டிரைவரின் தூக்க கலக்கதால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்தது.

    • அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 38). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் இந்திரா நகர் பகுதியில் இருந்து கோட்டக்குப்பத்திற்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிள் கோட்டகுப்பம் சறுக்கு பாலம் அருகே சாலையை கடக்கும்போது புதுவை மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதியது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சசை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×