என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Helicopter accident"
- பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
- சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
விமானி உள்பட நான்கு பயணிகளுடன் சேர்ந்து நேபாள நிறுவனத்தால் கட்டப்படும், அப்பர் அருண் ஹைட்ரோ திட்டத்திற்குச் சொந்தமான கட்டுமானப் பொருட்களை ஹெலிகாப்டர் ஏற்றிச் சென்றது.
ஹெலிகாப்டர் சங்குவாசபா மாவட்டத்தில் உள்ள பொடேகோலா ஆற்றின் அருகே தரையிறங்க முயன்றபோது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிம்ரிக் ஏர் ஹெலிகாப்டரின் உதவியாளர்களில் ஒருவரான பாவின் குருங் விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
ஹெலிகாப்டரில் இருந்த மற்ற நால்வரும் கேப்டன் சுரேந்திர பவுடல், பணியாளர்கள் ஷெரிங் போட் மற்றும் மனோஜ் தாபா மற்றும் நேபாள மின்சார ஆணைய ஊழியர் பிக்ரம் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
- ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
அருணாசல பிரதேச மாநிலம் சியாங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தலைமையகத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
தலைமையகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. சிங்கிங் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினரின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில் யார் பயணம் செய்தார்கள்? அவர்கள் கதி என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
- ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சி காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டரில் தலிபான்களின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தலைநகர் காபூலில் நடந்த இப்பயிற்சியின்போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 3 தலிபான்கள் உயிரிழந்தனர்.
மெக்சிகோவின் பியூப்லா மாநில கவர்னர் மார்த்தா எரிக்கா அலோன்சோ மற்றும் அவரது கணவர் ரபேல் மொரினோ (முன்னாள் கவர்னர்) ஆகியோர் நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இந்த ஹெலிகாப்டர் மாநில தலைநகரை ஒட்டியுள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் கவர்னர் மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812250934482146_1_mexicogovernor2._L_styvpf.jpg)
பழமைவாத தேசிய செயல் கட்சியின் முக்கிய தலைவரான அலோன்சோ, கடந்த 14-ம் தேதிதான் கவர்னராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. #MexicoGovernor #HelicopterCrash