என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Higher Education Department"
- சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை:
உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 202 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, புதிய கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோவை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசினர் கலை கல்லூரிகள் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- கல்லூரிகளில் பேராசிரியர்கள் ‘மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும்.
- இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது.
அதேபோல், கல்வி வளர்ச்சி, ஆராய்ச்சி உள்பட அனைத்திலும் உயர்கல்வித் துறை சிறந்ததாக மாற வேண்டும், அதிலும் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் பொற்காலமாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போதைய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு அங்கமாக, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அவசியம் என்ற கருத்தை உயர்கல்வித் துறை சமீபத்தில் அறிவுறுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக உயர்கல்வித் துறையின் துணை செயலாளர் ப.தனசேகர், உயர்கல்வித் துறைக்குட்பட்ட அனைத்து பல்கலைக்கழகம், கல்லூரிக்கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.
அதில், 'கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி காட்டும் விதமாகவும், உடல் அமைப்பை மறைக்கும் விதமாகவும் 'மேல் அங்கி' (ஓவர் கோட்) அணிய வேண்டும். மேலும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். இதற்கு அந்தந்த நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பேராசிரியர்கள் தரப்பில் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் எதிர்ப்பு குரலையும் பதிவு செய்கின்றனர்.
- இந்த உத்தரவு நடப்பு கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வர வேண்டும்.
- அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்ற நடவடிக்கை.
தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது.
தற்போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் பாடத்தேர்வு இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறையானது நடப்பு கல்வியாண்டிலேயே அதாவது அடுத்த செமஸ்டர் தேர்வு எப்போது நடைபெறுகிறதோ அதிலிருந்தே இந்த உத்தரவு நடைமுறைக்கு வரவேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு கல்லூரி முதல்வர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என்று 37 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்