search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hockey World Cup 2023"

    • பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி முன்னிலையில் இருந்தது.
    • பெனால்டி ஷுட்அவுட் முறையில் ஜெர்மனி 4-3 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ஜெர்மனி அணியில் இடம்பெற்ற கிராம்புஷ் சகோதரர்கள் தனிச்சிறப்பு பெற்றுள்ளனர்.

    ஒரே தேசிய அணிக்காக சகோதரர்கள் விளையாடுவது புதிதல்ல, ஆனால் இருவரும் ஒரே போட்டியில் கோல் அடிப்பது என்பது மிகவும் அரிது. அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் கிராம்புஷ் சகோதரர்கள் (கிராம்புஷ் மேட்ஸ் மற்றும் கிராம்புஷ் டாம்) கோல் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

    போட்டியின் பெரும்பாலான நேரம் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி, 2-0 என முன்னிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதாவது 57வது நிமிடத்தில் மேட்ஸ், 58வது நிமிடத்தில் டாம் கோல் அடிக்க, போட்டி 2-0 என சமநிலை பெற்றது. இதனால் பெனால்டி ஷுட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஜெர்மனி 4-3 என வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    சகோதரர்கள் மேட்ஸ் மற்றும் டாம் இருவரும் மான்செங்லாட்பாக் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரே கல்லூரியில் படித்து தற்போது கொலோனில் உள்ள ரோட்-வீஸ் கோல்ன் கிளப்பில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய நாடுகளில் தென் கொரிய அணி மட்டுமே காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
    • ஜெர்மனி அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஹாக்கி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெற்ற கிராஸ்ஓவர் போட்டியில் தென் கொரிய அணி, 2016 ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியது.

    ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 5-5 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாய்ப்பில் 3-2 என தென் கொரியா வெற்றி பெற்றது. ஆசிய நாடுகளில் தென் கொரியா மட்டுமே காலிறுதிக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

    மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி, 5-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. ஜெர்மனி அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது.

    • ஹர்திக் சிங்கிற்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடியது. அப்போது இந்திய அணியின் நடுக்கள வீரர் ஹர்திக் சிங்கின் (வயது24) தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் குணமடையாததால் அவர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி பிரிவு லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்றது. எனவே, காலிறுதியை உறுதி செய்வதற்கான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது. தற்போது முன்னணி வீரர் ஹர்திக் சிங் காயம் காரணமாக விலகியிருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஹர்திக் தனி ஆளாக அற்புதமான கோல் அடித்தார். வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்பெயின் அணிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் வீணடித்தது.
    • இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    ரூர்கேலா:

    உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. ரூர்கேலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    12வது நிமிடத்தில் துணை கேப்டன் அமித் ரோகிதாசும், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்து அசத்தினர். அதன்பின்னர் இரு தரப்பிலும் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல்கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்திய அணிக்கு ஐந்து பெனால்டி கார்னர்கள் கிடைத்த நிலையில், அதில் ஒன்றை ரோகிதாஸ் கோலாக மாற்றினார். இதேபோல் ஸ்பெயின் அணி மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. ஆனால் அனைத்தையும் வீணடித்தது.

    இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 5-0 என வென்றது குறிப்பிடத்தக்கது.

    • ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி தொடர் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது.
    • நாளை முதல் 29-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது.

    நாளை முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

    சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டா பெயரில் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் ஒன்று 20 ஆயிரம் இருக்கை வசதிகளுடன் ரூர்கேலா நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மட்டுமின்றி உலகின் மிக பெரிய ஸ்டேடியம் ஆக இருக்கும்.

    இந்நிலையில், ஒடிசாவின் கட்டாக் நகரில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல் மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நடனங்கள் மற்றும் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பிரபல பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சியும் நடந்தது. இந்தத் தொடக்க விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    ×