search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "holy thursday"

    • புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது.
    • கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் புனித வெள்ளிக்கு முந்தைய தினம் புனிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கத்தோலிக்க ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த ஆண்டு புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை (28-ந்தேதி) நடைபெறுகிறது. இந்த சடங்கில் பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் கேரளாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்வை கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியது.

    அதன்பிறகு அதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தற்போது நடத்த உள்ளது. இதில் அனைத்து தேவாலய பிரிவுகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கத்தின் முன்னாள் செயலாளர் சாந்தி மத்தாய் கூறியிருப்பதாவது:-

    தேவாலயத்தில் நடக்கும் சடங்குகள் பொதுவாக ஆண் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கின்றன. பாதிரியார் ஒருசில ஆண்களின் கால்களை கழுவுகிறார். அந்த சடங்கை ஒரு பொது இடத்துக்கு மாற்றுவதன் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துவதையும், சமூக தடைளை உடைப்பதையும் இந்திய கிறிஸ்தவ பெண்கள் இயக்கம் நோக்கமாக கொண்டுள்ளது.

    ஆகவே பெண்கள் பெண்களின் கால்களை கழுவும் நிகழ்வை நடத்துகிறோம். இந்த சடங்கு அனைத்து பாலினத்தவர்களையும் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் வகையில் தேவாலயத்துக்கு வெளியே நடைபெறும். அது பரஸ்பர மரியாதை. ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. புனித வியாழன் இன்று கடைபிடிக்கப்படுவதால் கிறிஸ்தவர்கள் ஓட்டு போடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. #HolyThursday #TNElections2019

    திண்டுக்கல்:

    தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 39 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று நடந்தது. காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

    இன்று புனித வியாழக்கிழமையாகும். இன்றைய தினம் கிறிஸ்தவர்கள் புனித வாரமாக கடைபிடித்து வருகிறார்கள். இதனால் ஏராளமானோர் நோன்பு இருந்து வருகின்றனர்.

    கடும் வெயிலும் கொளுத்தி வருவதாலும், இந்த தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாலும் அரசு இதற்கு செவிமடிக்கவில்லை என்ற காரணத்தினாலும் வாக்கினை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    தேர்தல் முடிந்த கையோடு நாளை(19-ந்தேதி) பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பெரும் பாலான வாக்குச்சாவடிகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

    நாளை புனித வெள்ளியாகும். அன்றைய தினம் கத்தோலிக்க திருச்சபையின் கடன் திருநாளாகும். எனவே இந்த சமயத்திலும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதால் கிறிஸ்தவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில்,

    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்நிலையை அவர்கள் மாற்றவேண்டும் என்றனர்.  #HolyThursday #TNElections2019 

    ×