என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "home ransacked"
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள மேலக்காவிரி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் பாண்டியன் (வயது 35). இவரது அண்ணன் விநாயகமூர்த்தி (38).
அண்ணன்- தம்பி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விநாயகமூர்த்தி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கணவரிடம் இருந்து தப்புவதற்காக அவரது மனைவி அருகில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதைதொடர்ந்து விநாயகமூர்த்தி தனது தம்பி பாண்டியன் வீட்டிற்கு சென்று என் மனைவிக்கு நீ எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாண்டியன் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாராணி வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தியை கைது செய்தார்.