search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hospital Fire Accident"

    • தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம்.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று (12-ந்தேதி) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30), மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


    மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 17 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீயில் சிகிச்சை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தீவிபத்து ஏற்பட்ட அவசர சிகிச்சை பிரிவி


    மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவு உள்ளது. கண் மருத்துவர் ஸ்டெல்லா மேரி பணியில் இருந்தார். இங்குள்ள அறுவைசிகிச்சை அரங்கில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. உடனே டாக்டர் ஸ்டெல்லாமேரி மற்றும் அப்பகுதியில் நின்றவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அறை கண்ணாடியை உடைத்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். எனினும் அங்கிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.

    இதுபற்றி திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏ.சி.யில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. இதனிடையே தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். தீ விபத்து குறித்து அங்கு நின்றவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.

    ×