search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hunger Protest"

    • தேர்வை ரத்துசெய்து புதிய தேர்வு நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
    • ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடைபெற்றது.

    இந்தத் தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது. இந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, கடந்த 3 நாளுக்கு முன் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பிரசாந்த் கிஷோர் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.

    இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 13-ல் நடந்த தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என்பதே எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்பவேண்டிய தேர்வை விற்பனை செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது.

    உடுமலை:

    கைத்தறி நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி உடுமலை அருகே உள்ள பெரிய வாளவாடி பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த அடையாள உண்ணாவிர போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ஜோதி ,செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ஜெயராமன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்வதற்கு அனுமதிக்க கூடாது. கைத்தறி நெசவாளர் காப்பீட்டு திட்ட அட்டையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பெண்கள் கைத்தறி ராட்டையில் துணி நெசவு செய்தனர்.

    • கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
    • தாசில்தார் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி -கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த மாதம் 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று (செவ்வாய்க்கிழமை) 8-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று ( திங்கட்கிழமை ) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் , மற்றும் பல்வேறு இயக்கங்கள் , விவசாயிகள்,பொதுமக்கள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் .இதனைத் தொடர்ந்து நேற்று காலை விஜயகுமார் வீட்டில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் போலீசார் ஆகியோர் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு தயாராக இருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் .பின்னர் சாமளாபுரம் வருவாய்த்துறை அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்லடம் டி.எஸ்.பி, கோட்டாட்சியர், பல்லடம் தாசில்தார், மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது விவசாயிகள் அதிகாரிகளிடம் "கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்" என தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் விவசாயிகளிடம் "கல்குவாரியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது,ஆய்வின் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். அதிகாரிகள் "கல்குவாரியை ரத்து செய்யப்படும்"என உத்திரவாதம் அளிக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் விவசாயி விஜயகுமாரின் வீட்டில் இருந்து கல்குவாரியை நோக்கி கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.பின்னர் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.இதனால் போலீசாருக்கும் ,விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

    கல்குவாரிக்கு செல்லும் வழியில் போலீசார் பேரிகார்டு வைத்திருந்தனர். இதனால் கல்குவாரியில் குதிக்கும் போராட்டத்திற்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் தர்ணா வில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல்லடம் டி.எஸ்.பி.விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் போலீசாரிடம்" தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு இயக்கங்கள் இணைந்து வருகிற 9-ந்தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விஜயகுமாருக்கு ஆதரவாக 25 விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்குவதாக தெரிவித்து விட்டு சென்றனர். 

    ×