என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Husband commits suicide in"
- ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.
- சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி சன்னியாசிபட்டி பகுதி மேட்டுப்பாளைய த்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மனைவி இறந்து விட்டார்.
இதனால் ஆறுமுகம் மனைவி இறந்த துக்கத்தில் நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதை யடுத்து உறவினர்கள் ஆறுமுகத்தை ஒரு தனியார் மரு த்துவமனைக்கு சிகிச்சை க்காக அழைத்துச் சென்ற னர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு முகம் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
பின்னர் இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் வினோத் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடந்தார்.
- கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாம்கோம்பை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (63). இவர் கோபியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். அதில் இருந்து மனோகர் வேலைக்கு எதுவும் செல்லாமலும், மது அருந்தியும் சுற்றி கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டில் விஷம் (சாணி பவுடர்) குடித்து மயங்கிய நிலையில் மனோகர் கிடப்பதாக அவரது தம்பி மகன் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்தவர் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனோகரை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த மனோகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
- செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
ஈரோடு:
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.
பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.
இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.
ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்