search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "i Dussehra festival"

    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் 4- ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழாவில் 4- ம் திருநாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மயில்வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    விரதம் இருந்து வந்த பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, கோவிலுக்கு வந்து, மஞ்சள் கயிற்றினால் ஆனகாப்பு வாங்கி வலது கையில் கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர், கோவிலில் திருவிழாவிற் கான அனைத்து ஏற்பாடு களையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்பு மணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை போலீஸ் துறை மின்சார துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசே கரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×