search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illegal money transaction"

    • பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
    • இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.

    சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.

    இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×