search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In government schools"

    • தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    சேலம்:

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு பாட இணைச் செயல்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ் மொழியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த தமிழ் கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    இதனிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,218 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றத்தை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதற்காக ஆண்டு ேதாறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்தது.

    தொடர்ந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதற்கான செலவின நிதியை மாவட்ட வாரியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் 291 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்காக ரூ.26.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறுகை யில், இந்த நிதியினை ெகாண்டு தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்த ஒவ்வொரு பள்ளியிலும் பணியாற்றும் முதுநிலை தமிழாசிரியர் ஒருவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நியமிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப் பெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

    எக்காரணத்தை கொண்டும் அத்தொகை யினை பிற இனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டமைக்கான செலவின விவரங்களையும், பயனீட்டு சான்றிதழையும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.

    ×