search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Kotagiri"

    • கடும் உறைபனி- விளைச்சல் குறைந்தது.
    • விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் இறுதியில் இருந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் வழக்கத்தைவிட கடுமையான குளிரும் நிலவுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் தேயிலை மற்றும் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரை, மலைப்பூண்டு போன்ற மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெற்று வருகிறது.இதில் கொடி பந்தலில் வளரக்கூடிய ேமரக்காய் கொடிகள் அதிகளவில் விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

    இந்நிலையில் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் ேமரக்காய் கொடிகள் அனைத்தும் வாடி வதங்கி காய்ந்து வருகின்றனர். அது மட்டும் இன்றி விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. 20 மூட்டை கிடைத்த இடத்தில் தற்போது 6 முதல் 7 மூட்டை வரை மட்டுமே மேரக்காய் காய்கறிகள் கிடைக்கிறது.

    அதுமட்டுமின்றி மேரக்காய்களுக்கு சரியான விலையும் விவசாயிளுக்கு கிடைப்பதில்லை. கடந்த 2 மாதத்திற்கு முன்பு ேமரக்காய் விலை 1 கிலோ ரூ.25-ல் இருந்து ரூ.20 வரையிலும் விற்பனை ஆனது. தற்போது ேமரக்காய் 1 கிலோ ரூ.8 விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் லாபம் ஒன்றும் இல்லாமல் பராமரிப்பு செலவிற்க்கு கூட கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். 

    ×