search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "including a former employee"

    • காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
    • 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னி மலை அருகே ஈங்கூரில் தனியா ருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் அலுவலக பணியாளராக பெருந்துறையில் உள்ள பெத்தாம்பாளையம் ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி (47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையின் மற்றொரு கிளை அதே பகுதியான ஈங்கூர் பாலப்பாளையம் அருகே இயங்கி வருகிறது. தினமும் காலை ஈங்கூர் தொழிற்சாலையில் இருந்து அலுவலக ஊழியர்கள் பாலப்பாளையம் தொழிற்சா லைக்கு பணம் கொண்டு சென்று அங்கு பண பரிவர்த்தனை முடிந்த பிறகு மீண்டும் மாலையில் தொழிற்சாலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    அதன்படி கடந்த 24-ந் தேதி மாலை வழக்கம் போல் நிறுவனத்தின் அலுவலக பணியாளர் சத்தியமூர்த்தி பாலப்பாளையம் தொழிற் சாலையில் பணப் பரிவர்த்தனை முடிந்த பின்னர் மீதி உள்ள ரூ.23 லட்சத்தை எடுத்துக் கொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் ஈங்கூர் தொழிற்சாலைக்கு கிளம்பி சென்றார்.

    பாலப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென எதிரே ஒரு காரில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் சத்தியமூர்த்தி ஓட்டி சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து சத்தியமூர்த்தியை அதே காரில் கடத்தி சென்றனர்.

    இதனையடுத்து ரங்கம்பா ளையம் குறிஞ்சி நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தின் அருகே காரை நிறுத்தி சத்தியமூர்த்தியின் கை கால்களை கட்டி ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர். இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் முதற்கட்ட விசாரணையில் கொள்ளை யர்கள் நன்கு திட்டம் போட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே இந்த நிறுவனத்திற்கு நன்கு பழக்கமானவர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    குற்றவாளிகளை பிடிக்க சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்ப ட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் ஒரு கார் சென்றது பதிவாகி இருந்தது. சத்தியமூர்த்தியிடம் அந்த காரை காண்பித்து கொள்ளையர்கள் வந்த கார் இதுதானா என்று கேட்கப்பட்டது. அப்போது அவர் இதுதான் கார் என அடையாளம் காட்டினார். அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி னர்.

    அப்போது அந்த கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் விரைந்து சென்றனர்.

    அங்கு சென்று அந்த காருக்கு சொந்தமான நபரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூரில் பணியாற்றும் ஒருவர் பெயரை சொல்லி அவர் வர சொன்னதால் தான் வந்ததாக கூறினார். உடனடியாக திருப்பூர் விரைந்து சென்ற போலீசார் அவர் கூறிய நபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதாவது திருப்பூரில் வேலை பார்க்கும் அந்த நபர் கொள்ளை நடந்த அந்த தனியார் இரும்பு தொழிற்சாலையில் ஏற்கனவே பணிபுரிந்தவர் என தெரிய வந்தது. சில காரணங்களுக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த நபர் அந்த தொழி ற்சாலையில் இருந்து வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிய வந்தது. அதன் பிறகு அந்த நபர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அந்த நிறுவனத்தின் பணம் வரவு, செலவுகள், பணம் எப்போது கொண்டு செல்லப்படுகிறது. அதை யார் கொண்டு செல்கிறார்கள் போன்ற விவரம் அவருக்கு தெரிந்துள்ளது.

    இதனையடுத்து அவர் திட்டம் தீட்டி நண்பர்கள் உதவியுடன் இந்த துணிகர கொல்லையில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் இந்த கொள்ளைக்கு இவர் தான் மூளையாக செயல்பட்டாரா? அல்லது வேறு யாரும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து முழுவதுமாக தகவல் தெரியவில்லை.

    தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் முழு விவரமும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். 

    ×